Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோதிடம்

கும்பம்
பலன்: குடும்பத்திற்காக வீண் அலைச்சலை சந்தித்து அதை வெளியில் காட்ட முடியாமல் வேதனைப்படும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும். அவிட்டம் 3, 4 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சதயம்: இந்த மாதம் பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். பூரட்டாதி 1, 2, 3 பாதம்: இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும், புகழும் கூடும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள். பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் சந்திராஷ்டம தினங்கள்: 7, 8