Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேணாம்!. எங்ககிட்ட வச்சிக்காதீங்க!.. தென் கொரியாவை எச்சரித்த வடகொரியா அதிபர்!...

Advertiesment
kim jong un

BALA

, சனி, 10 ஜனவரி 2026 (17:04 IST)
உலகிலேயே கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு நாடாக வடகொரியா இருக்கிறது. இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் திறந்து வெளி சிறையில் வாழ்கிறார்கள் என உலக அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த நாட்டில் வசிப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், மாதம் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என எல்லாவற்றையுமே அரசுதான் முடிவு செய்யும். அதோடு, அரசுக்காக பல வேலைகளையும் அவர்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் சிறைதான்.  அரசுக்கு தெரிவிக்காமல் அங்கே மூச்சு கூட விட முடியாது.

மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளியுலகம் தெரிந்து அவர்களின் பொது அறிவு வளர்ந்து விட்டால் தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வார்கள் என்பதற்காக கலந்த பல வருடங்களாகவே அந்த மக்களை நாட்டை விட்டு வெளியேறவிடாமல் ஒரே குடும்பம் வடகொரியாவில் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

ஒருபக்கம் அருகில் இருக்கும் தென் கொரியாவும் வடகொரியாவும் எதிரி நாடுகளாக இருக்கிறார்கள். தென்கொரியாவை சேர்ந்த திரைப்படங்களையும், பாடல்களையும் யாராவது வட கொரியாவில் கேட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும். சமீபத்தில் கூட தென்கொரிய பாடல்களை கேட்ட ஒரு இளைஞரை பொதுமக்கள் முன்பு கொன்று தண்டனை நிறைவேற்றினார்கள்.

இந்நிலையில்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ‘தென் கொரியா தங்கள் வான் எல்லைக்குள் ட்ரோன்களை அனுப்பி முக்கிய ராணுவ தளங்களை கண்காணித்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.. 3 மணி நேரத்திற்கு மேலாக பறந்த டோன்கள் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுத்திருக்கிறது.. அந்த விமானம் உளவு பார்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது.. இதற்காக தென்கொரியா கடும் விளைவை சந்திக்க நேரிடும்’ என அவரை எச்சரித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...