Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் வரலாற்றிலேயே முதல்முறையாக 400 பில்லியன் டாலர்கள் வருமானம்.. இந்த 2 காரணங்கள் தான்..!

Advertiesment
சுந்தர் பிச்சை

Siva

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (13:25 IST)
கூகுள் நிறுவனத்தின் 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டு முடிவுகளை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
 
கூகுள் வரலாற்றிலேயே முதல்முறையாக, அதன் ஆண்டு வருவாய் 400 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த அபார வெற்றிக்கு ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளின் உழைப்பே காரணம் என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
கூகுளின் முழுமையான AI Stack மற்றும் Gemini 3 தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. குறிப்பாக, கூகுள் வரலாற்றில் மற்ற எந்த மாடல்களையும் விட ஜெமினி 3 மிகவேகமாக பயனாளர்களிடையே சென்றடைந்துள்ளது. 
 
2026-ஆம் ஆண்டிற்குள் நுழையும் போது, கூகுள் நிறுவனம் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாகவும், இன்னும் பல அதிரடி மாற்றங்கள் வரவிருப்பதாகவும் சுந்தர் பிச்சை தனது ட்வீட்டில் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ஐடி துறையின் அஸ்திவாரத்தையே மாற்றப்போகும் ஒரு எச்சரிக்கை மணி. சுதாரிக்க வேண்டிய காலம்..!