பல்வேறு நாடுகளிலும் சமீபமாக Gen Z போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மொராக்கோவில் நடந்த Gen Z போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
தற்போது உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தும் வார்த்தையாக Gen Z மாறி வருகிறது. இந்தோனேஷியாவில் முதலில் Gen Z போராட்டம் வெடித்த நிலையில், அதை தொடர்ந்து நேபாளத்திலும் Gen Z இளைஞர் புரட்சியால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து பல நாடுகளில் இந்த Gen Z போராட்டம் தலைதூக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தற்போது மொராக்கோவில் அப்படியாக இந்த GEN Z போராட்டம் கிளம்பியுள்ளது. மொராக்கோவில் 2030ம் ஆண்டு பிஃபா உலக கால்பந்து போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதற்காக மொராக்கோ அரசு ரூ.8.8 லட்சம் கோடியை அதற்கு செலவு நிதியாக ஒதுக்கியுள்ளது.
ஆனால் நாட்டில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என பலவும் போதிய நிதி இல்லாமல் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இதற்கு எதிராக Gen Z போராட்டம் தொடங்கியது. ஆனால் இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் தற்போது போராட்டத்தின் போக்கு மாறியுள்ளது. 3 பேர் பலியான நிலையில் பல பகுதிகளிலும் இளைஞர்கள் பொது சொத்துகளை நாசப்படுத்துவது, அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K