Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரானுக்கு புதிய அதிபர்!.. டொனால்ட் டிரம்ப் போடும் ஸ்கெட்ச்!...

Advertiesment
donald

Mahendran

, ஞாயிறு, 18 ஜனவரி 2026 (10:00 IST)
ஈரான் அரசு கடந்த சில நாட்களாகவே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி காரணமாக ஆத்திரம்டைந்த  பொதுமக்கள் ஈரானின் பல முக்கிய நகரங்களிலும் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுக்களை வீசி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது துப்பாக்கிச்சூட்டையும் நடத்துகிறார்கள்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால், போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஒரு பக்கம் ஈரானில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஈரான் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் டிரம்ப். மேலும், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க படைகளும் அங்கு சென்றது. இந்நிலையில் ஈரானில் புதிய தலைமை அமைய வேண்டிய நேரம் இது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?