அமெரிக்கா எப்போதும் நாட்டாமை மனப்பான்மையுடன் செயல்படுகிறது என உலக தலைவர்கள் சொல்வார்கள்.. அதாவது எல்லாவற்றிலும் கருத்து கூறுவார்கள்.. உலகத்தின் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்த நினைப்பார்கள்.. தற்போது அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் கூட அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.. சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் மூலம் சூழல் வந்தது. பாகிஸ்தான் முக்கிய இடங்களை இந்தியா தாக்கியது.
இந்த போரை நிறுத்தியது நான்தான் என அப்போது சொன்னார் டிரம்ப். மேலும், சமீபத்தில் கூட இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமல்ல.. உலகில் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன்.. எனவே எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என பேசினார். ஒருபக்கம் அமெரிக்காவுக்கு ரஷ்யா சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் இந்தியா மீது 500 சதவீத வரியை விதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் டிரம்ப். இதற்கான மசோதாவையும் தயாரித்துவிட்டார். சமீபத்தில் கூட நான் மகிழ்ச்சியாக இல்லை என இந்திய பிரதமர் மோடிக்கு தெரியும்.. என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவரின் பணி என பயமுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று வெள்ளை மாலையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை சிறைபிடித்தது போல் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதினை சிறை பிடிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை என்று நக்கலாக பேசியிருக்கிறார்.