Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ!.. குவியும் பாராட்டு..

Advertiesment
boy

Mahendran

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (16:14 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு சிறுவன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான்கு மணி நேரம் கடலில் நீந்தி உதவியை பெற்ற சம்பவம் பாராட்டை பெற்றிருக்கிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் குயின்டாலப் என்கிற கடற்கரை இருக்கிறது.. அங்கு ஜோவான் ஆப்பல்பீ(47) என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் விடுமுறை கழிப்பதற்காக சென்றிருக்கிறார்.. அப்போது நீண்ட துடுப்பு கொண்ட ‘பேடில் போர்டு’ எனப்படும் படகில் சென்று கடலில் விளையாடியிருக்கிறார்கள்.. அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர காற்று வீசியதால் அனைவரும் கரையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டனர்..

அதோடு பெரிய அலைகளும் எழுந்ததால் நான்கு பேரும் கடலில் விழுந்தார்கள். அதேநேரம் நால்வரும்ம் கவுந்து கிடந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்தனர். லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் அவர்கள் நீரில் மூழ்கவில்லை. அப்போது ஜோவான் தனது 13 வயது மகன் ஆஸ்டினிடம் ‘நீ இங்கிருந்து நீந்தி கரைக்கு சென்று உதவிக்கு யாரையாவது அழைத்து வா’ என சொல்ல குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஆஸ்டின் அங்கிருந்து நீந்த துவங்கினார்.

முதல் இரண்டு மணி நேரம் லைப் ஜாக்கெட்டோடு நீந்திய ஆஸ்டின் நீந்துவதற்கு தடையாக இருந்ததால் அதையும் கழட்டி வீசிவிட்டு மீதி இரண்டு மணி நேரம் லைவ் ஜாக்கெட் இல்லாமல் கடலில் நீந்தியிருக்கிறார். நான்கு மணி நேரம் நீந்தி கரையை அடைந்த சிறுவன் அங்கு தனது தாயின் கைப்பையில் இருந்த செல்போன் மூலம் அவசர உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் தேர்தல் வேட்டை நடந்தது.. கரையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் பேடில் போர்டில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனின் குடும்பத்தினர் மீட்கப்பட்டார்கள்..

இதையடுத்து சிறுவன் ஆஸ்டினை ‘சூப்பர் ஹீரோ’ என்று ஆஸ்திரேலியா மக்கள் பாராட்டி வருகிறார்கள்.. இது தொடர்பாக கருத்து சொல்லியுள்ள அந்த சிறுவன் ‘நான் ஒன்றும் சூப்பர் ஹீரோ இல்லை. என் அம்மா, தம்பி, தங்கையை காப்பாற்றவே கடலில் நீந்தினேன். அது என் கடமை’ என்று சொல்லியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை!.. திறந்துவைக்கும் பிரதமர் மோடி!...