குஷ்புவின் பிரச்சாரத்திற்காக காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
குஷ்புவின் பிரச்சாரத்திற்காக காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சென்னையை அடுத்துள்ள படப்பை பகுதியில் நடிகை குஷ்புவின் பிரசாரத்திற்காக வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பிரசாரம் செய்தார்.
அவர் படப்பை பகுதியில் மாலை 6.30 மணி அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், 5 மணிக்கே தொண்டர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகின்றது. அப்போது கீழ்ப்படப்பை பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற திமுக பிரமுகர் திடீரென்று கூட்டத்தில் மயங்கி விழுந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.