Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லவர்களை தேர்வு செய்ய தமிழகம் தயாராக இல்லை: தமிழருவி மணியன் காட்டம்

நல்லவர்களை தேர்வு செய்ய தமிழகம் தயாராக இல்லை: தமிழருவி மணியன் காட்டம்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (12:31 IST)
தமிழகத்தில் நல்லவர்களை தேர்வு செய்ய மக்கள் தயாராக இல்லை என தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமர்ந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
 
ஆனால், இது ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைக்கும், ஊழலற்ற ஆட்சிமுறைக்கும், சமூகப் பொறுப்பு உள்ளவர்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் மிகப் பெரிய  தோல்வி என்பதே வருத்தமான உண்மையாகும்.
 
சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை  வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்க்கப்பட்டு, வலிமையான எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்துள்ளது.
 
தமிழகத்தில், இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் பக்கம் பார்வையைத் திருப்ப மக்கள் தயராக இல்லை.
 
குறிப்பாக, நேர்மை, சேவை, தனிமனிதப் நற்பண்புகளை கொண்ட  வேட்பாளர்களைத் தேர்வு செய்ய தமிழக மக்கள் தயராக இல்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments