யார்றா அந்த பொண்ணு?…. ஆண்ட்ரியாவேக் கூச்சப்படும் அளவுக்கு வர்ணித்த VJS!

vinoth
திங்கள், 10 நவம்பர் 2025 (13:03 IST)
கவின் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் அவரின் மேலாளர் எஸ் பி சொக்கலிங்கமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள். வெற்றிமாறன் இந்த படத்தின் படைப்பு ஆலோசகராகவும் வழங்குபவராகவும் செயல்படுகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் அப்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசினார். அவரின் பேச்சில் ஆண்ட்ரியா இன்னமும் இளமை மாறாமல் இருப்பதாக புகழ்ந்து பேசினார். அவரது பேச்சில் “நான் சிறுவயதில் பீச்சில் ஒரு சிலையைப் பார்த்தேன். அப்றம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன். ரொம்ப வருஷமா ரெண்டுமே ஒரே மாதிரிதான் இருக்கு.

அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு விளம்பரப் படத்தில் பார்த்திருக்கிறேன். அப்பவும் அப்படியேதான் இருந்தார். அப்ப நான் நெனச்சிருக்கேன் ‘யார்றா அந்த பொண்ணு?’னு. இப்பவும் அதேதான் நெனைக்குறேன். நாளைக்கு என் பையனும் ‘யார்றா இந்த பொண்ணு’ன்னு பாப்பான். எப்படி வீட்டுக்குள்ள போனதும் ஃப்ரிட்ஜ்குள்ள போய் உக்காந்துப்பீங்களா? இல்ல பெட்ல படுத்துடுவீங்களா தெரில” எனக் கொஞ்சம் ஓவராகவே ஆண்ட்ரியாவின் அழகை வர்ணித்துப் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார்றா அந்த பொண்ணு?…. ஆண்ட்ரியாவேக் கூச்சப்படும் அளவுக்கு வர்ணித்த VJS!

மாஸ்க் படத்தில் கவின் பாத்திரத்தில் வெற்றிமாறன் சார் கைவைத்து மாற்றினார் – நெல்சன் பகிர்ந்த தகவல்!

அரசன் படத்தில் வட சென்னை செந்திலாக இடம்பெற விரும்புகிறேன் –நடிகர் கிஷோர் வேண்டுகோள்!

தீபாவளி பிளாக்பஸ்டர் ‘டியூட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் நடிக்கும் ‘சிக்மா’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments