Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

Advertiesment
vijay sethupathi

BALA

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (19:21 IST)
குறும்படங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் விஜய் சேதுபதி. சென்னையில் உள்ள நடிப்பு பட்டறையில் பயிற்சி எடுத்தவர் இவர். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். துவக்கம் முதலே மற்ற நடிகர்களை போல ஹீரோயிசம் கட்டாமல், பந்தா பண்ணாமல், ஓவர் பில்டப் செய்யாமல், இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதனாலேயே இவரை பலருக்கும் பிடித்து போனது. அதேபோல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் கேமியோ, வில்லன் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.. ஒருபக்கம் பாலிவுட் படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில்தான் பாலிவுட்டில் தங்கல் படத்தை இயக்கிய நித்திஷ் திவாரி தற்போது இயக்கிவரும் ராமாயணா படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இந்த படத்தில் ராவணனின் சகோதரர் விபிசனன் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் இது தொடர்பான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.ராமாயணா படத்தில் கே.ஜி.எஃப் நடிகர் யாஷ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, காஜல் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!