ரிலீஸுக்கு முன்பே 315 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’!

vinoth
திங்கள், 10 நவம்பர் 2025 (09:26 IST)
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம் ரிலீஸானதும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் வியாபாரங்கள் தொடங்கியுள்ளன. இதுவரை படம் ரிலீஸுக்கு முன்பே சுமார் 260 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள திரையரங்க உரிமை 115 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமை 110 கோடி ரூபாய்க்கும், தொலைக்காட்சி உரிமை 55 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமை 35 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜய் பட வியாபாரத்தில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments