Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்… எப்போது தெரியுமா?

Advertiesment
லைகர்

vinoth

, ஞாயிறு, 9 நவம்பர் 2025 (10:00 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

அதே போல கன்னட சினிமாவில் தன்னுடையத் திரை வாழ்க்கையைத் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக ‘நேஷனல் க்ரஷாக’ உள்ளார். இருவரும் கீதகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இருவரும் அவ்வப்போது ஒன்றாக வலம் வந்து கொண்டிருந்தனர். இருவருமே தங்கள் காதல் கிசுகிசுக்களை அங்கிகரிக்கவோ நிராகரிக்கவோ இல்லை.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத்தில் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் எளிமையான முறையில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள மாளிகை ஒன்றில் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் & அஜித் கூட்டணியில் ஒரு படம்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!