வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (08:27 IST)
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான 'பேட் கேர்ள்'திரைப்படத்தின் டீசர் தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் காவல் துறை ஐஜி-யிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெற்றிமாறன் மற்றும் அனுராக் காசிப் இணைந்து தயாரித்த 'பேட் கேர்ள்' திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியிருந்தார். சமீபத்தில் வெளியான இதன் டீசரில், சிறுவர் மற்றும் சிறுமிகளை தவறாக சித்தரித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இதன் விளைவாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த டீசரை அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் நீக்க உத்தரவிட்டது.
 
இந்த சூழலில், வெங்கடேஷ் என்ற வழக்கறிஞர் தென் மண்டல ஐஜி பிரேம்நாத் ஆனந்தை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது:
 
'பேட் கேர்ள்' திரைப்படத்தை தயாரித்த வெற்றிமாறன், அனுராக் காசிப் ஆகியோரும், படத்தை இயக்கிய வர்ஷா பரத்தும் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த மனுவின் பேரில் காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

ஆன்லைன் பந்தய விளம்பரம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் CID விசாரணை!

ப்ரோ கோட் டைட்டிலுக்கான தடையை நீக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments