குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (11:45 IST)
தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான மதன் பாபு நேற்று தனது 71-வது வயதில் காலமானார். சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
1984-ம் ஆண்டு 'நீங்கள் கேட்டவை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், இயக்குநர் கே.பாலசந்தரின் 'வானமே எல்லை' திரைப்படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 
 
அதன் பிறகு, கமல்ஹாசனுடன் 'தேவர் மகன்', ரஜினிகாந்துடன் 'உழைப்பாளி', மணிரத்னத்தின் 'திருடா திருடா' போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments