பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்

vinoth
செவ்வாய், 11 நவம்பர் 2025 (09:36 IST)
பாலிவுட் மூத்த நடிகரும் பாஜக எம் பி ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார். அவருக்கு வயது 89.  இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக 60 கள் மற்றும் 70 களில் கலக்கியவர் தர்மேந்திரா.

அவரும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்த ஷோலே திரைப்படம் இந்திய வணிக சினிமாவின் கல்ட் கிளாசிக்காக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ஒரு  கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதைக் குறைத்துக் கொண்ட தர்மேந்திரா குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

கடந்த ஒரு வாரமாக மூச்சுத் திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திராவை பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் சென்று பார்த்து வந்தனர்.  இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்த வதந்தி பரவியது. தற்போது அவர் நலமாக உள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments