வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

Bala
திங்கள், 1 டிசம்பர் 2025 (12:59 IST)
50 ஆண்டுகால சினிமாவில் ரஜினி தன்னுடைய கடின உழைப்பாலும் திறமையாளும் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகராக தொடர்ந்து தன்னுடைய அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தற்போது கோவாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. சொல்லப் போனால் தமிழ் சினிமா இதை செய்திருக்க வேண்டும் .
 
இதைப் பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் அவருடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு நடிகருக்கு பட வாய்ப்பு கிடைப்பது என்பதே ஒரு சிரமமான விஷயம். அப்படி கிடைத்து அந்த வாய்ப்பை அந்த நடிகர் பயன்படுத்தி அந்த படத்தை நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்து வெற்றியை நாட்டுவது என்பது எவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
 
அதற்கு பின்னணியில் நிறைய போராட்டங்களை அந்த நடிகர் சந்திக்க வேண்டி இருக்கும். ஆரம்ப காலங்களில் இருந்து ஒரு நடிகர் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து கடைசியில் உச்சாணி கொம்பில் போய் உட்காரும் வரை அவர் ஏராளமான போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதை வார்த்தைகளால் நம்மால் விளக்கவே முடியாது.
 
 அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் இந்த சினிமா துறையில் ரஜினி 50 ஆண்டு காலமாக தன்னுடைய கடின உழைப்பாலும் திறமையாலும் சூப்பர் ஸ்டார் என்ற அந்த அங்கீகாரத்தை 50 ஆண்டு காலமாக விட்டுக் கொடுக்காமல் அந்த உயரத்திலேயே இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய கடின உழைப்பு மட்டுமே. இது வெறும் அதிர்ஷ்டத்தில் மட்டும் நடந்தது கிடையாது.
 
 அவருடைய உழைப்பாலும் திறமையாலும் கிடைத்த வெற்றி தான். அப்படிப்பட்ட உழைப்பாளருக்கு நமது இந்திய ஒன்றிய அரசு உரிய கௌரவத்தை கொடுத்துள்ளது. இதை நாம் பாசிட்டிவாக பார்த்தாலும் ஊடகங்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவே இல்லை. ஒரு சம்பிரதாயமாகவே இது பார்க்கப்பட்டது. அதனால் இது நமக்கு ஒரு லேசான வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களிலும் பிரபலங்கள் யாரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் எதுவும் தெரியவில்லை என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments