காந்தாரா படம் பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகம் காந்தாரா-1 உருவாகி ரிலீஸாகவுள்ளது. காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றி காரணமாக சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா ரிலீஸாக நாளை வெளியாகிறது.
சமீபத்தில் ஐந்து மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ஈடுபட்டு வருகிறார். அப்படி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரோடு தெலுங்கு நடிகரான ஜூனியர் என் டி ஆரும் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில்தான் பேசினார். ஆனால் ரசிகர்கள் அவர் தெலுங்கில் பேசவேண்டும் என விரும்பினர். அப்போது நான் தெலுங்கில் பேசவேண்டும் என நீங்கள் விரும்பினால், என் பேச்சை ஜூனியர் என் டி ஆர் மொழிபெயர்ப்பார் எனப் பேசினார். அவர் இப்படி பேசியவிதம் தெலுங்கு ரசிகர்களையும், ஜூனியர் என் டி ஆரையும் அவமதிக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காந்தாரா 1 படத்தைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.