ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

vinoth
செவ்வாய், 11 நவம்பர் 2025 (18:43 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார். இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு ஒரு குறுகிய காதலிலும் இருந்து பிரிந்துவிட்டார்.

இந்நிலையில் தமன்னா தன்னைப் பற்றிப் பரவும் ஒரு வதந்தி குறித்து பதிலளித்துள்ளார். ஒல்லியாக இருப்பதற்கு ஹார்மோன் ஊசிகளை பயன்படுத்துகிறார் என்ற வதந்தியை மறுத்துள்ள அவர் “அந்தக் கருத்தில் எந்த உண்மையும் இல்லை. நான் சினிமாவுக்கு வந்தபோது எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இருக்கிறேன். பொதுவாக பெண்களின் உடல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அதுபோலதான் நானும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments