ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் எல்லை மீறி நடக்கத் தொடங்கினார்… தமன்னா பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 9 ஆகஸ்ட் 2025 (10:10 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட்டானது. காதலர் விஜய் வர்மாவுடன் வசித்து வரும் தமன்னா பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதற்கிடையில் அவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடனான காதலையும் பிரேக் அப் செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கத் தொடங்கிய போது ஒரு நடிகர் என்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டார். அவரது செயல்கள் எனக்கு சங்கடத்தைக் கொடுத்தன. இப்படி நீங்கள் நடந்துகொண்டால் நான் தொடர்ந்து நடிக்க மாட்டேன் எனக் கூறினேன். அதன் பின்னர் அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இப்படியான சம்பவங்களும் என் திரைவாழ்க்கையில் உண்டு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments