தற்போது சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருக்கிறார். கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற படங்களின் மோசமான விமர்சனம் அடுத்து எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. அந்த வகையில் கருப்பு திரைப்படம்தான் அவர் நம்பும் படமாக இருக்கிறது.
இதுவை ரொமாண்டிக், ஆக்ஷன், செண்டிமெண்ட் போன்ற ஜானரில் நடித்து வந்த சூர்யா கருப்பு படத்தில் ஒரு சீனில் கருப்பசாமியாகவோ அல்லது ஐய்யனாரகவோவாக வருகிறாராம். கருப்பு படம், கிராமத்தில் சாமி ஆடி குறி சொல்வார்கள், அப்படியான ஒரு ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் சூர்யா கருப்பசாமி அல்லது அய்யனார் சாமியாக வருவாராம். காந்தாரா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் ரிஷப் ஷெட்டிக்கு காந்தாரா சாமி வந்து எதிரிகளை துவம்சம் செய்துவிடுவார். அப்படி காந்தாராவின் அந்த காட்சியை பார்த்து கருப்பு படத்திலும் ஒரு சண்டை காட்சியை வைத்திருக்கிறார்களாம் .அந்த சண்டை காட்சியை வரும் 15 ஆம் தேதிதான் எடுக்க இருக்கிறார்களாம்.
கடந்த 10 ஆம் தேதி சமீபத்தில் சூர்யாவை வைத்து ஒரு ஃபோட்டோ சூட்டும் எடுத்தார்களாம். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இன்னொரு பக்கம் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.