விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் சூர்யா…!

vinoth
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (07:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை இயக்கும் ஒரு இயக்குனராக இருந்து வந்தார் சிறுத்தை சிவா. அவர் இயக்கும் படங்கள் எல்லாம் மிகவும் சுமாரான கதை மற்றும் அரதப் பழசான மசாலா டெம்ப்ளேட்டாக இருந்தாலும் அவருக்குத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் வாய்ப்பளித்து வந்தனர்.

இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். கடைசியாக அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று அவரை கேலிக்குரியவராக்கியது.

இதனால் சிறுத்தை சிவா அடுத்த படத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அவர் பெரிதும் நம்பிய அஜித்தே இப்போது இணைந்து படம் பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கும் ‘ழகரம்’ தயாரிப்பு நிறுவனம் மூலமாகத் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா நிர்வாகத் தயாரிப்பாளராக செயலாற்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் சூர்யா…!

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments