ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் கருப்பு படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் படக்குழு மேல் அதிருப்தியில் அவ்வபோது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதனால் ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான God mode பாடல் வெளியானது. இன்னும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் முடியாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தற்போது கருப்பு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்கள் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்போடு மொத்தக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. தற்போது வரை கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய எந்த உறுதியான தகவலும் இல்லை.