நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் பந்தய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்த போட்டிகள் முடிந்தவுடன், அவர் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அஜித் பங்கேற்ற ரேஸ் சர்க்யூட்டிற்கே நேரடியாக சென்று நடிகர் சிம்பு, அஜித்தை நேரில் சந்தித்துள்ளார்.
அஜித்தின் ரேசிங் அணியின் ஜெர்சியை அணிந்து, சிம்பு அவருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அஜித் கார் ரேசிங்கில் வெற்றிபெற சிம்பு வாழ்த்தியதை தொடர்ந்து, இருதரப்பு ரசிகர்களும் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.