இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
இப்போது அவர் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்துள்ள கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் இந்தியில் அவர் நடிப்பில் உருவான தாமா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. ஹாரர் படமாக உருவான தாமா படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, நவாஸுதீன் சித்திக்கி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான 14 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.