லியோ, ஜெயிலர் & விக்ரம் ஹிட்… சினிமாவை விட்டே போயிடலாம்னு நெனச்சேன் -இயக்குனர் பாண்டிராஜ்!

vinoth
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (13:58 IST)
தமிழ் சினிமாவில் குடும்பக் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பாண்டிராஜ்.  அப்படி அவர் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ போன்ற படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.

ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் அவரது டெம்ப்ளேட்டில் இருந்தும் படுதோல்வி அடைந்தது. அந்த படத்தின் தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய வரவேற்புப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நிதிச்சிக்கலை எதிர்கொண்டேன். லியோ, விக்ரம் மற்றும் ஜெயிலர் போன்ற ஆக்‌ஷன் கதைகள் மட்டுமே வெற்றி பெற்றதால் இனிமேல் குடும்பக் கதைகள் வெற்றி பெறாதோ என்று நினைத்து சினிமாவை விட்டே சென்றுவிடலாம் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments