Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமே 18 நாளில் சென்சார்!... மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

Advertiesment
jananayagan

BALA

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (09:53 IST)
திரைத்துறைக்கும், சென்சாருக்கும் இடையே பல வருடங்களாகவே சுமூகமான உறவு இல்லை.. இயக்குனரிடம் உள்ள கருத்து சுதந்திரத்தை சென்சார் போர்டு பறிப்பதாகவே பல இயக்குனர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். அதிலும் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த, அந்த கொள்கையை கொண்ட நபர்கள் சென்சார் போர்டில் இருக்கும் போது அந்த கருத்துக்கு எதிராக ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ ஒரு இயக்குனர் படத்தில் வைத்திருந்தால் அதை நீக்க சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கூட சென்சாரில் சிக்கியால் இதுவரை வெளியாகவில்லை. உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என வழக்கு மாறி மாறி நடந்து வருகிறது .சென்சார் பிரச்சினை எப்போது முடிந்து ஜனநாயகன் படம் எப்போது வெளிவரும் என யாருக்கும் தெரியவில்லை
.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் ‘திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். அதேபோல் குறும்படங்களுக்கு மூன்று நாட்களுக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..