துருவ் பட்ட கஷ்டத்தைப் பார்த்து வேறு படம் பண்ணலாமா என நினைத்தேன் –மாரி செல்வராஜ் பகிர்வு!

vinoth
வியாழன், 2 அக்டோபர் 2025 (09:05 IST)
வாழை படத்தின் இமாலய வெற்றிக்குப் பின்னர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம்மை கதாநாயகனாக வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படம் ஏற்கனவே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் தென் தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரராக துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்துக்காக அவர் ஒரு ஆண்டு முழுவதும் பயிற்சி மேற்கொண்டு கபடி வீரராக உருமாறியுள்ளார்.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் “எல்லோராலும் இந்த படத்தில் நடித்துவிட முடியாது. படத்தையும் வழக்கமான சினிமா படம் போல படமாக்கமுடியாது. படம் ஆரம்பித்துக் கொஞ்ச நாளில் துருவ் ரொம்ப கஷ்டப்பட்டார். அவர் படும் கஷ்டத்தைப் பார்த்து வேறு கதை பண்ணலாமா எனக் கேட்டேன். ஆனால் அவர் “நான் உங்களை நம்பி வருகிறேன். இது உங்கள் கனவுப் படம்” என்றார். அவர் மட்டுமில்லாமல் அவர் குடும்பமே என்னை நம்பியது. தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக துருவ் இருப்பார்” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments