அஜித் கேட்ட சம்பளத்தால் கைவிடப் பட்டதா ‘மங்காத்தா 2’?

vinoth
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (12:16 IST)
வெங்கட்பிரபு சென்னை 28 ,சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

இதனால் இந்த படத்தின் பார்ட் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாகக் கேட்டு வருகின்றனர். இந்த படத்துக்கானக் கதையை வெங்கட் பிரபு எழுதி முடித்துவிட்டு அஜித்தின் அழைப்புக்காகக் காத்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ அஜித், வெங்கட் பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இந்தி தயாரிப்பாளர் மனீஷ் வெங்கட் பிரபு மற்றும் அஜித்தை வைத்து ‘மங்காத்தா 2’ படத்தை எடுக்க விரும்பி சென்னைக்கு வந்து இரு தரப்பையும் சந்தித்துப் பேசியுள்ளார்.  ஆனால் அஜித் கேட்ட சம்பளம் காரணமாக அவர் இந்த படத்தைத் தயாரிக்கும் முடிவில் இருந்து பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments