தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

vinoth
செவ்வாய், 11 நவம்பர் 2025 (12:51 IST)
சிவகார்த்தியேன் போல சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் கவின். லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. தற்போது அவர் நடிப்பில் ‘கிஸ்’ மற்றும் ‘மாஸ்க்’ ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் ’கிஸ்’ கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஜென் மார்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் நீண்ட காலமாக உருவாக்கத்தில் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி ஆனது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது.

சுவாரஸ்யமில்லாத திரைக்கதைக் காரணமாக ரசிகர்களால் கண்டுகொள்ளப்படாத இந்த படம் ஓடிடியில் ரிலீஸான பிறகும் பெரியளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சதீஷ் படத்துக்கு ‘கிஸ்’ என்று பெயர் வைத்ததுதான் மிகப்பெரிய தவறாகி விட்டது எனக் கூறியுள்ளார். மேலும் “கிஸ் என்பது தூய்மையான ஒரு உணர்வு.ஆனால் அதை தவறாக புரிந்துகொண்டார்கள். எங்கள் தலைப்பே எங்களுக்கு எதிராகிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments