தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதையடுத்து படத்தின் சென்னை, இலங்கை மற்றும் பாங்காங்க் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று அந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்துகு சிக்மா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.