தளபதி கச்சேரி எப்படி இருக்கு? ‘ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய விமர்சனம்

Bala
சனி, 8 நவம்பர் 2025 (19:40 IST)
இன்று விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கூடவே மமிதா பைஜுவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பாபி தியோல் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
படம் அடுத்த வருட பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது.அதனால் ரசிகர்கள் மத்தியில் இதன் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எப்பவும் போல விஜய்க்குண்டான அதே ஹைப் கொஞ்சம் கூட குறையாமல் இந்த பாடலை அனைவரும் ரசிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
 
பாடல் ரிலீஸானது  முதல் சோசியல் மீடியாக்களில் அனைவருமே விஜய்க்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார்கள். பக்கா செலிபிரிட்டி டிரேக்காக இந்தப் பாடல் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். அனிருத் எப்பவும் போல அவருடைய பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். மாஸ் , எனர்ஜி, க்யூட் ஆகியவை இணைந்த ஒரு ஃபேர்வெல்லாக இது பார்க்கப்படுவதாகவும் கூறி வருகிறார்கள்.
 
பாடலில் விஜய் நடித்த பல படங்களின் ரெஃபரன்ஸ்கள் இருப்பதால் அவருடைய ரசிகர்களுக்கான பாடலாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்த பாடலை எங்கேயோ கொண்டு போய்விடுவார்கள் என்றும் கூறி வருகிறார்கள்.
 
 நிச்சயமாக தியேட்டர் ஒரு கான்சர்ட் ஹாலாக மாறும் என்றும் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் ஒரே பாடலில் விஜயின் பல ரெஃபரன்ஸ்கள் இருப்பது ஏற்கனவே குட் பேட் அக்லியில் அஜித் ரசிகர்களுக்காக ஆதிக் அஜித்தின் பல ரெஃபரன்ஸை வைத்து அவருடைய ரசிகர்களை கவர்ந்தது போல எச்.வினோத்தும் டிரை பண்ணியிருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Jananayagan: ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. தளபதி கச்சேரி சும்மா தெறி!...

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments