நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் தற்போது அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார். அனிருத் இசையில் படம் உருவாகி இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது விஜயின் கடைசி படமாக இருக்கலாம் என கருதப்படுவதால் இப்படத்தைக் காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மெகா வெற்றி விஜயின் தேர்தல் அரசியலுக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அதாவது தளபதி கச்சேரி என்கிற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை பாடலாசிரியர் அறிவு எழுதி இருக்கிறார். விஜய், அனிருத். அறிவு மூவரும் சேர்ந்து இப்பாடலை பாடியிருக்கிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த பாடல் அமைக்க உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் சேர்ந்து நடனமாடும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பாடல் வெளியான 23 நிமிடங்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.