கிடப்பில் போடப்பட்டதா அமீர்கான் –லோகேஷ் படம்?

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (08:43 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர்.

சமீபத்தில் வெளியான ரஜினி – லோகேஷ் கூட்டணியின் ‘கூலி’ படத்தில் தாஹா என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்புத்தோற்றத்தில் அமீர்கான் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அமீர்கான் ரசிகர்கள் ஏன் இந்த வேடத்தில் அவர் நடித்தார் என சமூகவலைதளங்களில் புலம்பி வந்தனர்.

இதற்கிடையில் அமீர்கான் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாக இருந்த ஒரு சூப்பர் ஹீரோ படம் தற்பொது கிடப்பில் போடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் கூலி படத்துக்கு எழுந்த நெகட்டிவ் விமர்சனங்களால் அமீர்கான் இந்த படத்தைத் தொடங்குவதில் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments