Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

Advertiesment
ilayaraja

Mahendran

, புதன், 4 பிப்ரவரி 2026 (17:22 IST)
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் பாக்யராஜ். அதன்பின் திரைப்படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்க தொடங்கினார். குறிப்பாக பாக்யராஜின் திரைப்படங்கள் பெண்களை மிகவும் கவர்ந்தது. அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. தமிழ் சினிமா பாக்கியராஜை திரைக்கதை மன்னன் என கொண்டாடியது.

அதேநேரம் பாக்யராஜின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்தாலும் பாக்கியராஜுக்கும், அவருக்கும் பல படங்களில் கருத்து மோதல் வந்தது.  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், சண்டையும் வந்ததால் ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்தனர். என்னாலும் இசையமைக்க முடியும் என சொன்ன பாக்யராஜ் ஒரு சில படங்களுக்கு அவரே இசையும் அமைத்தார்.

இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய இளையராஜா ‘பாரதிராஜாவின் படம் ஒன்றுக்கு நான் இசையமைக்க விருந்தது.. அந்த படத்தின் கதையை சொல்ல பாக்கியராஜை அனுப்புகிறேன் என பாரதிராஜா என்னிடம் சொன்னார். ‘ஏன் இப்படி கண்டவர்களை எல்லாம் என்னிடம் கதை சொல்லி அனுப்புற’ என நான் கோபப்பட்டேன்.. ஆனால் பாக்கியராஜ் கதை சொன்னதைக் கேட்டபோது வியந்து போனேன்..

யாருக்கு என்ன திறமை இருக்கும் என்பதை தீர்மானிக்க நான் யார் என் அன்று தான் யோசித்தேன்.. அப்போதிலிருந்து புதுமுக இயக்குனர் யார் வந்தாலும் அவர்களின் படங்களுக்கு இசையமைப்பது என முடிவு செய்தேன்.  என்னை மாற்றியதே பாக்யராஜ்தான்’ என்று அவர் கூறியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?