ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!

vinoth
வெள்ளி, 14 நவம்பர் 2025 (08:25 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தரமணி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் காத்திரமான நடிப்பைப் வழங்கிப் பாராட்டுகளைக் குவித்துள்ளார்.  மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

தற்போது மாஸ்க் என்ற படத்தை தயாரித்து அதில் எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “வடசென்னை சந்திரா கதாபாத்திரத்துக்கு என்க்குப் பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இயக்குனர்களுக்கு என்னை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. உண்மையை சொல்வதெல்லால் பல ஹீரோக்களுக்கு வலுவானப் பெண் கதாபாத்திரங்கள் அவர்கள் படங்களில் இருப்பதேப் பிடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments