பக்கா கமர்ஷியல் படம்… மதராஸி படக்குழுவைப் பாராட்டிய ஷங்கர்!

vinoth
சனி, 6 செப்டம்பர் 2025 (11:18 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள ‘மதராஸி’ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. கடந்த காலங்களில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸாகும் சிவகார்த்திகேயன் ‘மதராஸி’ படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில் வித்யுத் ஜமால், பிஜு மேனன், ருக்மினி வசந்த் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மதராஸி நேற்று முதல்நாளில் இந்திய அளவில் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் ஷங்கர் சிலாகித்துப் பாராட்டியுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில் “ மதராஸி- படம் திருப்தியளிக்கக் கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்குப் படம். நிறைய தியேட்டர் தருணங்களைக் கொண்டிருந்தது. ஏ ஆர் முருகதாஸ் எமோஷனையும் ஆக்‌ஷனையும் அருமையாகக் கோர்த்திருந்தார்.  காதல் கதையையும் குற்றப் பின்னணியையும் இணைத்திருந்த விதம் அருமையாக இருந்தது. சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக அவர் ஆச்சர்யப்படுத்துகிறார். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு ஒரு க்ரியாயூக்கியாக இருந்தது. வித்யுத் ஜமால் … வாவ்…ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிப் படத்துக்குப் பிறகு அடுத்த பட வேலைகளைத் தொடங்கிய மகிழ் திருமேனி- ஹீரோ இவரா?

ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!

ரி ரிலீஸில் புதிய சாதனைப் படைத்த ‘பாகுபலி தி எபிக்’!

காவ்யா மாறனுடன் அமெரிக்காவில் உலாவந்த அனிருத்… புகையும் வதந்தி!

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments