ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

Bala
வியாழன், 13 நவம்பர் 2025 (18:44 IST)
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆடுஜீவிதம். பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பிரித்விராஜ் இந்தப் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் ஒருவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு உணர்வு பூர்வமான படமாக இது அமைந்திருந்தது.
 
ஒரு கிராமத்தில் கிடைத்த வேலையை செய்து தன் அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் ஒருவனுக்கு திடீரென வளைகுடா நாட்டில் பெரிய வேலை என்று சொன்னதும் சந்தோஷத்தில் வேலைக்காக அந்த வளைகுடா நாட்டிற்கு செல்கிறான். அங்கு போன பிறகுதான் தெரிகிறது. அங்கு பாலைவனத்தில் இருக்கும் ஒட்டகங்களை மேய்ப்பதற்காகத்தான் தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்று. 
 
எப்படியாவது இங்கு இருந்து போய்விடலாம் என்று எண்ணுகிறான். ஆனால் சுற்றிலும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. எங்கும் தப்பித்து போகமுடியாது. இதுதான் கதி என நினைத்து அந்த ஒட்டகங்களுடனேயே தன் வாழ்க்கையை கழிக்கிறான். ஒரு கட்டத்திற்கு பிறகு அங்கு இருந்து தப்பித்து தன் சொந்த ஊரை எப்படி அடைகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இது பென்யாமின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட கதை.
 
இந்தப் படத்தை பற்றி சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சேரன் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது இந்த நாவலை அடிப்படையாக வைத்து சேரன் ஏற்கனவே கதை பண்ண வேண்டும் என நினைத்தாராம். அதற்காக விஷாலிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார். கதையை விஷாலும் அவரது அண்ணனும் கேட்டுவிட்டு சரி பண்ணலாம் என சொல்லியிருக்கிறார்கள்.
 
அந்த நேரத்தில்தான் விஷாலுக்கு அவன் இவன் பட வாய்ப்பு வர அதில் நடிக்க போய்விட்டாராம். சேரனால் அந்தப் படத்தை எடுக்கமுடியவில்லையாம். ஆனால் ஆடுஜீவிதம் படத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம். இன்னும் அந்த கதையில் பர்மா மற்றும் வியட்நாமில் குழந்தைகள் கேம்ப் என்ற பெயரில் அந்த குழந்தைகளை எல்லாம் அழைத்து வந்து ஒட்டகங்களை மேய்க்க சொல்வார்கள். அது இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். ஆனால் அதை பற்றி ஆடுஜீவிதம் படத்தில் காட்டவில்லை. ஆர்யாவிடமும் இந்தக் கதையைல் சொல்லியிருக்கிறேன்.
 
சார், கதை சூப்பர் சார், பெரிய படமாக இருக்கும் போலயே என்று சொல்லி அவரும் நடிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரைக்கும் தற்போது ஒரு கமெர்ஷியல் வெற்றி தேவைப்படுகிறது. வெற்றிக்கு நான் எங்கே போவது? யாரிடம் கேட்பது என சேரன் சொல்லி வருத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments