புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

Bala
புதன், 12 நவம்பர் 2025 (19:56 IST)
தனுஷின் சமீபத்திய ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி ட்ரெண்டிங்காகி வருகின்றது. தனுஷ் தற்போது தன்னுடைய 54வது படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தான் நடித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெயின் படத்தின் விளம்பர வேலைகளுக்காக மும்பை சென்றுள்ளார்.
 
சமீபத்தில் கூட அவர் விமான நிலையத்திற்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் கடைசியாக நடித்த இட்லி கடை திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் netflix ல் வெளியாகி அந்த படத்திற்கு தற்போது நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இந்த நிலையில் தான் அவருடைய பாலிவுட் திரைப்படமான தேரே இஸ்க் மெய்ன் படத்தின் விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்று இருக்கிறார். அந்த படத்தின் விழாவில் தனுஷ் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
 அவருடைய லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மிகவும் ஸ்டைலாக பங்க் வைத்தவாறு அந்த புகைப்படத்தில் அவர் காணப்படுகிறார். நடிப்பு இயக்கம் என பிசியாக வலம் வரும் தனுஷ் ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார். ஒரு பக்கம் தன்னுடைய குடும்பம் குழந்தைகள் என பொறுப்புள்ள ஒரு மனிதராகவும் இருந்து வருகிறார்.
 
திருமண உறவில் விரிசல் ஏற்பட்டாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் சினிமா நடிப்பு தொழில் என தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பின் மேலேயே செலுத்தி வருகிறார். 40 வயதிலயும் ஒரு பக்குவப்பட்ட நடிகராக காணப்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
 ஆரம்பத்தில் அவர் மீது சில பல முரண்பாடுகள் ரசிகர்களிடம் இருந்தாலும் தற்போது அவர் மீது ஒரு மிகுந்த மரியாதையே அவர்களுக்கு வந்திருக்கிறது. அதை நல்ல முறையில் தக்க வைத்து வருகிறார் தனுஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

ஆன்லைன் பந்தய விளம்பரம்: நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் CID விசாரணை!

அடுத்த கட்டுரையில்