மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான 'மன சங்கரவரபிரசாத் காரு'வின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 157வது படமாக உருவாகும் இந்த படத்தில் இருந்து 'சசிரேகா' என்ற லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த திரைப்படத்தை 'எஃப் 2', 'பகவந்த் கேசரி' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர்' தோல்வியை தழுவிய நிலையில், இந்த புதிய படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போது வெளியான 'சசிரேகா' பாடல், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.