இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இந்த படம் எவ்வளவு பிரபலமானது என்றால் படத்தின் ஒரு பாடலில் கோபிகா அணியும் சேலையை ஆட்டோகிராப் சேலை என்று சொல்லி தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்கும் அளவுக்கு.
இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஆட்டோகிராஃப் படம் புதுப்பொலிவுடன் ரி ரிலீஸாகவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்த படம் ரி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படக்குழுவினர் கலந்துகொண்ட ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொண்டு பேசிய சேரன் “ஆட்டோகிராஃப் படத்தை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த ரி ரிலீஸ். இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ப கலர் கரெக்ஷன் செய்துள்ளேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதைக் கடந்து செல்லும் மனிதாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த கதையை உருவாக்கினேன். இதில் காதல் என்பது வெறும் கருவிதான். இன்றைய தலைமுறையினர் இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு வேறு யோசனைகள் தோன்றலாம்.” எனக் கூறியுள்ளார்.