அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

vinoth
செவ்வாய், 11 நவம்பர் 2025 (12:58 IST)
இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இதையடுத்து சேரன் நடிகராகவே 10 ஆண்டுகளுக்கும் மேல் வெற்றிகரமாக வலம் வந்தார். இந்த கதையில் சேரன் நடிப்பதற்கு முன்னால் தமிழ் சினிமாவின் அப்போதைய இளம் கதாநாயகர்கள் அனைவருக்கும் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் நடிக்காததால் தான் நடித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஆட்டோகிராஃப் படம் புதுப்பொலிவுடன் ரி ரிலீஸாகவுள்ளது. வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி இந்த படம் ரி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்துப் படத்தைப் ப்ரமோஷன் செய்யும் வேலைகளில் சேரன் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி அவர் அளித்த ஒரு நேர்காணலில் விக்ரம் ஏன் ஆட்டோகிராஃப் படத்தை நிராகரித்தார் என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “சேது படம் வெளியானதில் இருந்தே நானும் விக்ரமும் ஒரு நல்ல படம் பண்ணவேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் சொன்னார். அப்போது ஜெமினி பட வாய்ப்பு வந்தது. அதில் நடித்துவிட்டு வருகிறேன் என சொல்லி சென்றார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ஆட்டோகிராஃப் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

அடுத்த கட்டுரையில்
Show comments