அஜித்குமார் ரேஸிங் அணியோடு கைகோர்த்த ரிலையன்ஸின் ‘கேம்பா’ கோலா!

vinoth
வியாழன், 13 நவம்பர் 2025 (08:15 IST)
தன்னுடைய ‘குட் பேட் அக்லி’ படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டது.

இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்தும் வகையில் செயல்பட உள்ளதாக அஜித் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு ஸ்பான்சர் கிடைப்பதில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அஜித்குமார் ரேஸிங் அணியின் உற்சாக பான ஸ்பான்சராக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா கோலா இணைந்துள்ளது. இதை கேம்பா கோலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments