Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

Advertiesment
அய்யனார் துணை

Siva

, வியாழன், 5 பிப்ரவரி 2026 (12:09 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அய்யனார் துணை' சீரியல் குழுவினர், ரசிகர்களுக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். 
 
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பதோடு, மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மதுமிதா மற்றும் அரவிந்த் சேஜு முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடர், நான்கு சகோதரர்கள் உள்ள ஒரு கூட்டு குடும்பத்தில் மூத்த மருமகளாக வரும் நாயகி சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டது.
 
தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், சீரியலை தவறவிட்ட ரசிகர்களுக்காக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான முக்கிய நிகழ்வுகளை ஒரே நாளில் பார்க்கும் வசதியை தொலைக்காட்சி நிர்வாகம் செய்துள்ளது. 
 
அதன்படி, வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை, ஒன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக 'அய்யனார் துணை' மெகா எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகரும் இந்த தொடரின் புதிய முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்