Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் ரேஸை ப்ரமோட் பண்ணுங்க… என்னை இல்ல – ஜெர்மனியில் அஜித் பேச்சு!

Advertiesment
அஜித்
, திங்கள், 1 செப்டம்பர் 2025 (08:05 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தன்னுடைய பட சம்மந்தமான விளம்பர நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அவரது படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங்கும் வசூலும் கிடைக்கின்றன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலமாக அஜித் வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இதற்காக அவர் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியையும் உருவாக்கி நடத்தி வருகிறார். இதற்காக அஜித் சென்னையில் இருப்பதை விட துபாயில் அதிக நாட்கள் செலவிட்டு கார் ரேஸுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் அவரது அணி கலந்துகொண்டு வருகிறது. அப்போது அவரை ஒரு ஊடகவியலாளர் நேர்காணல் செய்ய வந்தபோது “எல்லோரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எளிது என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவது சவாலானது. அதனால் மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்துங்கள்; என்னை ப்ரமோட் பண்ணாதீங்க. நிச்சயமாக இந்தியாவில் இருந்து ஒரு f1 ரேஸர் வந்து உலகளவில் கவனம் ஈர்ப்பார்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!