Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ்வர்யா தடை செய்த ரஜினியின் மெழுகு சிலைகள்

ஐஸ்வர்யா தடை செய்த ரஜினியின் மெழுகு சிலைகள்

ஐஸ்வர்யா தடை செய்த ரஜினியின் மெழுகு சிலைகள்
, புதன், 15 ஜூன் 2016 (12:05 IST)
பிரமாண்டமாக கட் அவுட் வைப்பது, பேனர்கள் செய்வது, வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் செய்வது என்று, தான் தயாரிக்கும் படத்தை பிரபலப்படுத்த தாணு கையாளும் வழிமுறைகள் பிரமாண்டமானவை.


 


பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியை வைத்து கபாலி படத்தை தயாரித்துள்ளார். அவரது விளம்பர மூளை உலக அளவில் புகுந்து புறப்படுகிறது.
 
தனியார் விமான கம்பெனி ஒன்று கபாலியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. அவர்களின் விமானங்களில் கம்பெனி பெயரை மறைத்து கபாலி விளம்பரம் செய்ய தாணு முயற்சி எடுத்து வருகிறார். அதேபோல் சீனாவில் இருந்து ரஜினியின் மெழுகு சிலைகளை தருவித்திருக்கிறார். தாணு ஆர்டர் கொடுத்து செய்தவை.
 
கபாலி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினியின் மெழுகு சிலையை வைப்பதாக திட்டம். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தாணுவின் இந்தத் திட்டத்தை அமங்கலமாக நினைத்து மறுத்திருக்கிறார். அவரது உணர்வை புரிந்து கொண்ட தாணுவும் மெழுகு சிலை திட்டத்தை கைவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனித் ராஜ்குமாருக்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்