திடீரென அனுஷ்கா ஷெட்டி எடுத்த முடிவு.. ரசிகர்களுக்கு கைப்பட எழுதிய கடிதம்..!

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (15:45 IST)
நடிகை அனுஷ்கா ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரது 'காட்டி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான 'காட்டி' படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சில காலத்திற்கு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். வெறுமனே ஸ்க்ரோல் செய்வதை நிறுத்திவிட்டு நிஜ உலகத்துடன் தொடர்புகொள்ள விரும்புகிறேன். விரைவில் உங்களை சந்திப்பேன். எப்போதும் புன்னகையுடன் இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அனுஷ்காவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் சிலர், இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். சிலர், அனுஷ்காவின் தனிப்பட்ட முடிவுக்கு மரியாதை அளிப்பதாகவும், அவர் விரைவில் மீண்டும் வர வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments