ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

Siva
திங்கள், 13 அக்டோபர் 2025 (17:00 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அடுத்த ஐ.பி.எல். சீசனில் விளையாடுவது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. ஆர்.சி.பி. அணி தொடர்பான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க அவர் மறுத்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது.
 
இது குறித்துப் பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, "வர்த்தக ஒப்பந்தத்தை மறுத்ததால் அவர் ஆர்.சி.பி.யை விட்டு வெளியேறுவார் என்று அர்த்தம் இல்லை. அவர் நிச்சயமாக அதே அணிக்காக விளையாடுவார். கோப்பையை வென்ற பிறகு அவர் ஏன் வெளியேற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், வர்த்தக ஒப்பந்தம் என்பது விளையாடும் ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டது என்றும், விளம்பரம் மற்றும் பிராண்டிங் தொடர்பானது என்றும் சோப்ரா விளக்கினார். ஆர்.சி.பி. அணி விற்பனைக்கு வரலாம் என்ற தகவலும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சற்று விலகி இருந்த கோலி, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் மீண்டும் இணைகிறார். அவரது வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments