Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

Advertiesment
India vs Pakistan

Siva

, திங்கள், 2 பிப்ரவரி 2026 (12:23 IST)
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது உலக கிரிக்கெட் பொருளாதாரத்தின் இதயம். இந்த ஒரு போட்டியின் வர்த்தக மதிப்பு சுமார் ரூ. 4,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு இப்போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது உலக கிரிக்கெட் அமைப்பான ஐசிசி-யை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். ஒளிபரப்பு நிறுவனமான ஜியோ-ஸ்டார் விளம்பர வருவாயில் மட்டும் ரூ. 300 கோடியை இழக்கும். மேலும், ஐசிசி தனது வருமான பங்கீட்டை குறைக்கும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ரூ. 200 கோடி வரை இழக்க நேரிடும். 
 
ஒப்பந்தங்களை மீறுவதால் காப்பீடு அல்லது சட்ட பாதுகாப்பு கிடைக்காது. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை குறைத்து, எதிர்கால ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகளையும் பாதிக்கும். இறுதியில், பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் வாரியமே பெரும் சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
இந்தியா vs பாகிஸ்தான், கிரிக்கெட் பொருளாதாரம், ஐசிசி வருமானம், பிசிபி இழப்பு, டி20 உலகக் கோப்பை 2026, ஒளிபரப்பு உரிமம், விளையாட்டு வணிகம்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்