Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீன ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி

சீன ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெற்றி
, வியாழன், 8 அக்டோபர் 2015 (18:22 IST)
சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


 
 
சீனா பீஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா , சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகியோர் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ் , செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஜோடியை எதிர்கொண்டனர்.
 
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. முதல் செட்டில் இரு ஜோடிகளுக்கும் கடும் போட்டி நிலவியது.  இறுதியில் சானியா-மார்டினா ஜோடி 7-5 செட்கணக்கில் முன்னிலை பெற்றது. 
 
2வது செட்டில் சானியா ஜோடி அபாரமாக விளையாடியதில்  7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் ஜூலியா ஜோடியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 
 

Share this Story:

Follow Webdunia tamil